நாகை-செல்லூர் சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாகை-செல்லூர் சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிப்பாளையம்,
நாகையில் இருந்து செல்லூர் செல்லும் சாலை பழுதடைந்து மிகவும் மோசமாக உள்ளது.இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் தமீம் அன்சாரி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சரபோஜி, நகர செயலாளர் குணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகை-செல்லூர் சாலை பழுதடைந்துள்ளதால் போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இதனை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த செல்லத்துரை, நாகரத்தினம், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story