கீழ்வேளூர் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் - ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
கீழ்வேளூர் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சிக்கல்,
கீழ்வேளூர்.ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓன்றியக்குழு கூட்டம் தலைவர் வாசுகி நாகராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது :-.
கண்ணன் (தி.மு.க.) :-தேவூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகள் சரியானபடி கணக்கெடுப்பு நடத்தபடவில்லை, அதை முறையாக கணக்கெடுக்க வேண்டும். தேவூர் ஊராட்சியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றுவதற்கு 20-க்கு மேற்பட்ட மின் கம்பங்கள் 3 மாதத்திற்கு முன்பு நடப்பட்டது. இதுவரை அதற்கு உரிய மின்கம்பிகள், இணைப்புகள் கொடுக்கப்படாமல் உள்ளது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேன்மொழி. (அ.தி.மு.க.) :- அகரகடம்பனூர் ஊராட்சி ராமர்மட சாலை, திருக்கண்ணங்குடி சன்னதி தெரு சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அதை சீர் செய்ய வேண்டும். கோவில் கடம்பனூரில் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தரவேண்டும்.
பிரவிணா (அ.தி.மு.க) :- வலிவலம், கொடியலத்தூர் ஊராட்சிகளில் குடியிருக்கும் பகுதிக்கு அருகே மயான கொட்டகை உள்ளது இதனால் சுகாதாரமற்ற காற்றினை மக்கள் சுவாசிக்கின்றனர்.எனவே மயான கொட்டகைக்கு புகைபோக்கி அமைத்து தரவேண்டும். வலிவலம் ஊராட்சி அலுவலக கட்டிடம் பழுதடைந்தள்ளது. அதை புதுபித்து தரவேண்டும்.
கருணாநிதி (தி.மு.க.) :- வடகரை ஊராட்சி வங்காரமாவடி சந்து வழி சாலை, வெங்கிடங்கால் ஊராட்சி வாழ ஒக்கூர், ஏழேகால் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஒன்றிய குழு துணை தலைவர் புருஷோத்தமதாஸ் :- மணலூர் கீழத்தெரு தார் சாலை, காக்கழனி- வங்காரம் தார்சாலை, ஆந்தக்குடி தெற்கு தெரு தார் சாலைகள் சேதமடைந்துள்ளது. அதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும்.
ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன் :- தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். முதல்-அமைச்சராக பதவி ஏற்று அரசின் நடவடிக்கைகளால் ஒரு நாள் பாதிப்பு 2 ஆயிரமாக குறைந்தது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை மக்கள் அதிக அளவில் செலுத்தி வருகின்றனர். இதற்கு முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலையா, இல்முன்னிசா, ஹபிப்கனி வாசுகி, ரேவதி, மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story