தண்டுமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
தண்டுமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
கோவை
கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியல் பூட்டு நேற்று காலை உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் பார்த்துள்ளனர். அவர்கள் உடனே இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். விசாரணையில், நள்ளிரவில் சுவர் ஏறி குதித்த மர்ம ஆசாமிகள் கோவிலின் உள்ளே நுழைந்துள்ளனர். உண்டியலில் 3 பூட்டுக்கள் போடப்பட்டு இருந்தன. ஒரு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் மற்ற பூட்டுக்களை உடைக்க முடியாமல் திருட்டு ஆசாமிகள் தப்பிச் சென்றனர். இதனால் உண்டியலில் இருந்த பணம் தப்பியது.
இதனை தொடர்ந்து அதே பகுதியில் உள்ள காதி கிராப்ட் விற்பனையகத்தின் பின்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்ற அதே ஆசாமிகள் அங்கு இருந்த 60 பட்டுச் சேலைகளை திருடி சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ. 6 லட்சம் ஆகும். மற்றொரு பகுதியில் இருந்த ரூ.50 ஆயிரம் அவர்களி்ன் கண்களில் படாமல் தப்பியது.
இந்த இரண்டு திருட்டு குற்றங்கள் குறித்தும் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகிறார்கள். இந்த இரண்டு சம்பவங்களும் அருகருகே நடைபெற்றுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story