மயிலாடுதுறை மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் வங்கி கடனுதவி
மயிலாடுதுறை மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் வங்கி கடனுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் லலிதா தெரிவித்து உள்ளார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 35 வரையிலான பொதுப்பிரிவினரும், 18 முதல் 45 வயது வரையிலான சிறப்பு பிரிவினரும் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை மற்றும் வியாபார தொழில் செய்து பயன் பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் வியாபாரம், சேவை தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், உற்பத்தி தொழில்களுக்கு ரூ.15 லட்சம் வரையிலும், திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.2½ லட்சம் அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் 2021-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி வரை வழங்கப்படும் கடன் திட்ட பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சியில் இருந்து தமிழக அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே பயன் பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msme.online.tn.gov.in/uyegp என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தொழில் மையத்தில் உள்ள பொது மேலாளரின் 8925533969 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story