மழைக்காலத்தில் மின் விபத்துகளை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - மின்வாரியம் அறிவிப்பு


மழைக்காலத்தில் மின் விபத்துகளை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - மின்வாரியம் அறிவிப்பு
x
தினத்தந்தி 31 July 2021 8:22 PM IST (Updated: 31 July 2021 8:22 PM IST)
t-max-icont-min-icon

மழைக்காலத்தில் மின் விபத்துகளை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை மின் வாரியம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து மின்வாரிய மன்னார்குடி செயற்பொறியாளர் ராதிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மன்னார்குடி, 

தமிழகத்தில் மழை காலங்களில் மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக, பொதுமக்கள் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடக்கூடாது. அறுந்து கிடக்கும் மின் கம்பி குறித்து உடனடியாக மின் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை மின் ஊழியர் துணையோடு வெட்ட வேண்டும்.

மின்கம்பத்தின் அருகில் உள்ள இழுவைகம்பியிலோ, மின் கம்பத்திலோ கயிறுகட்டி துணிகளை உலர்த்தக் கூடாது. மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது. மின் பாதைக்கு கீழே ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது. இடி, மின்னலின் போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற வழிமுறைகளை கடைப்பிடித்து மின் விபத்துகளை தவிர்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story