கோவையில் கடப்பாரை கொள்ளையர்கள் நடமாட்டம்


கோவையில் கடப்பாரை கொள்ளையர்கள் நடமாட்டம்
x
கோவையில் கடப்பாரை கொள்ளையர்கள் நடமாட்டம்
தினத்தந்தி 31 July 2021 8:29 PM IST (Updated: 31 July 2021 8:29 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் கடப்பாரை கொள்ளையர்கள் நடமாட்டம்

கோவை

கோவை மதுக்கரை மார்க்கெட், ஸ்ரீ ராம் விலாஸ் பகுதிகளில் தொடர்ச்சியான வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் லாட்ஜ் உரிமையாளர் ரவிக்குமார்,  ஓய்வு பெற்ற எல்.ஐ.சி மேலாளர் ரவிச்சந்திரன் வெங்கட்,  ஓய்வு பெற்ற சாப்ட்வேர் என்ஜினீயர் சதீஷ்குமர்  உள்பட 7 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை நடைபெற்றது. இந்த சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இந்த நிலையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் நள்ளிரவில் வீட்டு கதவு, பூட்டுகளை உடைத்து கைவரிசை காட்டும் கடப்பாரை கொள்ளையர்கள் நடமாட்டம் பதிவாகி இருந்தது தெரியவந்தது.சிலர் டவுசர் அணிந்தவாறு,  சட்டை அணியாமல், கையில் கடப்பாரையையுடன் வருவது திடுக்கிட வைத்துள்ளது. 

அவர்கள் பொதுமக்களிடம் இருந்து பிடிபடாமல் இருக்க உடலில் எண்ணை தடவி வெறும் மேனியுடன் வந்து கை வரிசையை காட்டுவதும் தெரியவந்ததுள்ளது. இந்த கொள்ளையவர்கள் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கேமராவில் சிக்கிய காட்சிகளை வைத்து, கொள்ளையர்களின் உருவங்களை ஆய்வு செய்து,  தனிப்படை போலீசார் தீவிர தேடுதல்  வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும் இடங்களில் கொள்ளையவர்கள் நள்ளிரவு ரோந்து பணியையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.



Next Story