ரேஷன் அரிசியை மாவாக அரைத்து விற்பனை செய்தவர் கைது

ரேஷன் அரிசியை மாவாக அரைத்து விற்பனை செய்தவர் கைது
x
ரேஷன் அரிசியை மாவாக அரைத்து விற்பனை செய்தவர் கைது

ரேஷன் அரிசியை மாவாக அரைத்து விற்பனை செய்தவர் கைது

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் அருகே வனபத்ரகாளியம்மன் கோவில் ரோடு  காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60).இவர் ரேஷன் அரிசிகளை வாங்கி தனது குடோனில் பதுக்கி வைத்து க மாவாக அரைத்து விற்பனை செய்வது தெரியந்தது.

 இதுபற்றி தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

செல்வராஜூக்கு சொந்தமான  குடோனில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குடோனில் இருந்து 27 ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் ரேஷன் அரிசியை மாவாக அரைத்து விற்பனைக்கு வைத்து இருந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக   வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.

Next Story