246 பேருக்கு கொரோனா முதியவர் பலி


246 பேருக்கு கொரோனா முதியவர் பலி
x
246 பேருக்கு கொரோனா முதியவர் பலி
தினத்தந்தி 31 July 2021 9:09 PM IST (Updated: 31 July 2021 9:09 PM IST)
t-max-icont-min-icon

246 பேருக்கு கொரோனா முதியவர் பலி

கோவை

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்தது. அதன்பிறகு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கையின் பலனாக தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது.

ஆனால் கடந்த 27-ந் தேதி முதல் கோவையில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 5-வது நாளான நேற்றும் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. அதில் மாவட்டத்தில் நேற்று மேலும் 246 பேருக்கு கொரோனா தொற்று  உறுதியானது.

இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத் தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 2 லட்சத்து 29 ஆயிரத்து 353-ஆக அதிகரித்தது. 

மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 223 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 236 ஆக அதிகரித்தது

இந்த நிலையில் கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இவர் உள்பட கொரோனாவுக்கு இதுவரை மாவட்டத்தில் 2,177 பேர் உயிரிழந்தனர். 1,940 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 45 பேருக்கு கொரோனா தொற்று  உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்து 524 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 46 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 29 ஆயிரத்து 805 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 540 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமுள்ள 351 ஆக்சிஜன் படுக்கைகளில் 71 படுக்கைகள் நிரம்பியது. 280 படுக்கைகள் காலியாக இருக்கிறது.

Next Story