மின்கம்பியில் உரசியதால் லாரியில் ஏற்றி சென்ற வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது


மின்கம்பியில் உரசியதால் லாரியில் ஏற்றி சென்ற வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 31 July 2021 9:30 PM IST (Updated: 31 July 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

திருக்காட்டுப்பள்ளியில் லாரியில் ஏற்றி சென்ற வைக்கோல் மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்து எரிந்தது.

திருக்காட்டுப்பள்ளி, 

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் கோடை நெல் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் வயல்களில் வைக்கோலை எந்திரங்கள் மூலம் கட்டி அதை வெளிமாவட்ட வியாபாரிகள் லாரிகளில் ஏற்றி சென்று வருகின்றனர். 

இந்த நிலையில். நேற்று மாலை இளங்காடு கிராமத்தில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மெயின்ரோடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த பகுதியில் தாழ்வாக இருந்த மின்கம்பியில் வைக்கோல் உரசியதில் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக டிரைவர் லாரியை வயல்வெளியில் நிறுத்திவிட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

அதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். இதனால் லாரி எந்தவித சேதமும் இன்றி தப்பியது.

Next Story