நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 31 July 2021 10:00 PM IST (Updated: 31 July 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.21 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்:
நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.21 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று மாதாந்திர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ரேஷன் கடைகளில் உள்ள பயோ மெட்ரிக் எந்திரத்தில் பதிவான கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. 
அப்போது நாகை தாலுகாவிற்கு உட்பட்ட 139 ரேஷன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களிடம் இருந்து வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணம் வசூல் செய்யப்படுவதாக நாகை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சித்ரவேலு தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், அருள்பிரியா மற்றும் போலீசார் நேற்று மாலை நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். 
கணக்கில் வராத ரூ.21 ஆயிரம் பறிமுதல்
இந்த சோதனையில் வட்ட வழங்கல் அலுவலர் பூபதியிடம் இருந்து கணக்கில் வராத ரூ.21 ஆயிரத்து 50-ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து கணக்கில் வராத பணம் தொடர்பாக வட்ட வழங்கல் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 
நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.21 ஆயிரத்து 50-ஐ பறிமுதல் செய்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-------

Next Story