செஞ்சி அருகே இளம் பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து திருமணம் செய்ய மறுப்பு வாலிபர் கைது


செஞ்சி அருகே இளம் பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து திருமணம் செய்ய மறுப்பு வாலிபர் கைது
x
தினத்தந்தி 31 July 2021 10:23 PM IST (Updated: 31 July 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே இளம் பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

செஞ்சி,

செஞ்சி பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம் பெண். இவரும், செஞ்சி அடுத்த மீனம்பூர் பள்ளியம்பட்டை சேர்ந்த முரளி (வயது 30) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.  அப்போது முரளி இளம் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார்.

இதில், கர்ப்பம் அடைந்த இளம் பெண், இதுபற்றி முரளியிடம் தெரிவித்தார். அப்போது அவர், கர்ப்பத்தை கலைத்துவிடுமாறும், அதன்பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதை நம்பிய இளம் பெண், கர்ப்பத்தை கலைத்துவிட்டார். 

பின்னர் முரளியிடம் இளம் பெண் தனது குடும்பத்தினருடன் சென்று கேட்டுள்ளார். அப்போது 20 சவரன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தால்தான் திருமணம் செய்ய முடியும் என்று முரளி மற்றும் அவரது பெற்றோர் கூறிவிட்டனர். 

மேலும் அவர்களை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து இளம் பெண், செஞ்சி அனைத்து மகளிர் போலீசில் புகார்செய்தார். அதன்பேரில்  முரளி மற்றும் அவரது தந்தை செல்வராஜ்,  தாய் ஜெயலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து,  முரளியை கைது செய்தனர்.


Next Story