பெரியகுளம் அருகே மண் அள்ளி வந்த 3 லாரிகள் பறிமுதல்
பெரியகுளம் அருகே அனுமதியின்றி மண் அள்ளி வந்த 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரியகுளம்:
பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப், கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக நேற்று தேனி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். பெரியகுளம் அருகே தேனி புறவழிச்சாலையில் அவர் வந்தபோது, அந்த வழியாக கிராவல் மண் ஏற்றிக்கொண்டு 3 டிப்பர் லாரிகள் சென்று கொண்டிருந்தன.
உடனே காரை நிறுத்திய சப்-கலெக்டர் ரிஷப், அந்த லாரிகளை நிறுத்தி அனுமதி சீட்டை கேட்டார். அப்போது லாரிகளின் டிரைவர்கள் உடைகல் ஏற்றி செல்வதற்கான அனுமதிச்சீட்டினை கொடுத்தனர். அப்போது தான் அவர்கள் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து 3 டிப்பர் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு, பெரியகுளம் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இதுதொடர்பாக துணை தாசில்தார் மோகன்ராம் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் லாரி டிரைவர்கள் முருகேஸ்வரன், வினோத், எட்டப்பன், லாரி உரிமையாளர்கள் சோலைராஜ், சரவணன், சரவணகுமார் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story