தோல் நோய் சிகிச்சை முகாம்


தோல் நோய் சிகிச்சை முகாம்
x
தினத்தந்தி 31 July 2021 10:51 PM IST (Updated: 31 July 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் தோல் நோய் சிகிச்சை முகாம் நடந்தது.

கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் தேவர் தொடக்கப்பள்ளியில் சுகாதார ஆய்வாளர் செண்பகமூர்த்தி ஏற்பாட்டில் இலவச தோல் நோய் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. முகாமில் மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர் யமுனா கலந்து கொண்டு 54 பேருக்கு பரிசோதனை நடத்தி, ஆலோசனைகள் வழங்கினார். முகாமில் நல கல்வியாளர் முத்துக்குமார், மேற்பார்வையாளர் நியூட்டன் பெர்னாண்டோ, டெக்னீசியன் சங்கரநயினார், முட நீக்கு நிபுணர் மதுரை, சுகாதார ஆய்வாளர்கள் மந்திரமூர்த்தி, சண்முகசுந்தரம், சின்னத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story