கிணற்றில் அழுகிய நிலையில் பெண் பிணம்
கோவில்பட்டி அருகே கிணற்றில் அழுகிய நிலையில் பெண் பிணமாக மிதந்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்துள்ளது முடுக்கு மீண்டான்பட்டி கிராமம். இங்குள்ள கண்மாய் கரையிலுள்ள கிணற்றில் பெண் பிணம் மிதப்பதாக தீயணைப்பு படை வீரர்களுக்கு நாலாட்டின்புத்தூர் போலீசார் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கோவில்பட்டி தீயணைப்பு படை வீரர்கள் அதிகாரி அருள்ராஜ் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் கிடந்த பெண் பிணத்தை கூண்டில் கயிறு கட்டி மீட்டனர்.
அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட பெண், அரக்கு நிறத்தில் நைட்டி அணிந்துள்ளார். காதில் கம்மல் உள்ளது. தலைமுடி ஆண்கள் கிராப் முடி மாதிரி உள்ளது. அவா் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. பிணத்தை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கஸ்தூரி விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story