உயிருக்கு போராடிய அண்ணனும் சாவு
தனது வீட்டில் மதுகுடித்த கும்பலை கண்டித்தவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், படுகாயம் அடைந்த அவருடைய அண்ணனும் பரிதாபமாக இறந்தார். மருத்துவ மாணவர்களான அவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் இரட்டைக்கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
சிவகங்கை,
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மது குடித்தனர்
இதில் ஜோசப் சேவியர் 2-ம் ஆண்டும், கிறிஸ்டோபர் முதலாம் ஆண்டும் படித்தனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக 2 பேரும் வீட்டிலேயே ஆன்லைன் மூலம் படித்து வந்தனர்.
இவர்களுக்கு சொந்தமாக வண்டவாசியில் இருந்து அண்ணாமலை நகர் செல்லும் வழியில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் வீடு ஒன்றும் உள்ளது. அந்த வீட்டில் ஆள் இல்லை.
இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி அந்த வீட்டில் சிலர் கும்பலாக மதுகுடித்துக் கொண்டு இருந்தனர். இதுபற்றி இருதயராஜூக்கு தகவல் தெரியவந்தது.
வெட்டிக்கொலை
இதில் சம்பவ இடத்திலேயே கிறிஸ்டோபர் பலியானார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இருதயராஜ், அவருடைய மூத்த மகன் ேஜாசப் சேவியரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
5 பேர் கைது
இதில் மருதுபாண்டி, நந்தகுமார், வசந்த்், பாலாஜி, சரவணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.
மற்றொருவர் சாவு
இதை தொடர்ந்து இந்த வழக்கை இரட்டை கொலை வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர். தனது வீட்டில் மது குடித்ததை தட்டி கேட்ட விவகாரத்தில் மருத்துவ மாணவர்களான அண்ணன்-தம்பி 2 பேரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story