வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கறம்பக்குடி, ஆக.1-
வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலை
கறம்பக்குடி அருகே உள்ள கிளாங்காடு முதலிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகு (வயது 60). விவசாயியான இவர் கடந்த 25-ந்தேதி அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அழகு சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் ரெகுநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து அழகுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் ஆதனக்கோட்டை அருகே உள்ள மாந்தாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (60). இவர் கடந்த சில மாதங்களாக வயிற்றுவலியால் அவதி அடைந்து வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய்குணமாகவில்லை.
இதனால் மனம் உடைந்த அவர் விஷசெடி இலையை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story