பெண் சாவில் திடீர் திருப்பம்: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அடித்து கொன்றது அம்பலம் கணவன் உள்பட 2 பேர் கைது


பெண் சாவில் திடீர் திருப்பம்: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அடித்து கொன்றது அம்பலம் கணவன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 31 July 2021 11:30 PM IST (Updated: 31 July 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே பெண் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அடித்து கொன்றது அம்பலமானது. இதுதொடர்பாக கணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே பெண் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அடித்து கொன்றது அம்பலமானது. இதுதொடர்பாக கணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பெண் சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள காடுமுச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரேகவுடு (வயது 38) விவசாயி. இவருடைய மனைவி பாரதி (28). இவர் கடந்த 26-ந்தேதி குடும்பத்தகராறு காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாரதியின் தந்தை பைரப்பா தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் பிரேத பரிசோதனையில் பாரதியின் உடலில் அடித்ததற்கான உள்காயங்கள் இருந்தது. இதனால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மாரேகவுடுவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 
அண்ணன், தம்பி கைது
அப்போது பாரதிக்கும், அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியை அடித்த போது சுவரில் தலை மோதியது. இதில் பாரதி இறந்து விட்டதும், இதையடுத்து தனது தம்பி சூடேசிடம் கூறி கொலையை மறைக்க மனைவியின் உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து அண்ணன், தம்பிகளான மாரேகவுடு, சூடேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பெண்ணை அடித்து கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story