தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 31 July 2021 11:30 PM IST (Updated: 31 July 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி:

காலபைரவர் கோவில் 
கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறுக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து காலபைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் சாமி தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
இதில், ஏராளமான பக்தர்கள் பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி வழிபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சூரன்குட்டை பைரவர் கோவில் 
இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன் குட்டையில் உள்ள தட்சணகால பைரவர் மற்றும் கந்திகுப்பம் காலபைரவர் கோவில்களில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதில் சூரன் குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

Next Story