கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை


கோவில்களில் பக்தர்கள்  தரிசனத்துக்கு தடை
x
தினத்தந்தி 31 July 2021 11:37 PM IST (Updated: 31 July 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை,ஆக.1-
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.
பக்தர்களுக்கு தடை
கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து பல்வேறு மாவட்டங்களில் கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை சுப்பிரமணியசுவாமி கோவில், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில், புதுக்கோட்டை டவுன் சாந்தநாதசுவாமி கோவில், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில், நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில், இளஞ்சாவூர் வீரமாகாளியம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (திங்கட்கிழமை), நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு பக்தர்கள்  தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பூஜைகளுக்கு அனுமதி
கோவில் அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொண்டு ஆகமவிதிப்படி பூஜைகள் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேற்று இரவு பிறப்பித்துள்ளார்.

Next Story