சாலை விபத்தில் தனியார் பள்ளி முதல்வர் பலி
வேலாயுதம்பாளையம் அருகே சாலை விபத்தில் தனியார் பள்ளி முதல்வர் பரிதாபமாக இறந்தார்.
வேலாயுதம்பாளையம்
பள்ளி முதல்வர்
சேலம் கிச்சிப்பாளையம் சீனிவாச தோட்டத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 40). இவர் திண்டுக்கலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி காயத்ரி. இந்த தம்பதிக்கு மகதிஸ்ரீ (13) என்ற மகளும், தியபன் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் தினேஷ்குமார் தனது மகள் மகதிஸ்ரீ பூப்புனித நீராட்டு விழாவிற்கு திண்டுக்கலில் உள்ள உறவினரிடம் பத்திரிக்கை கொடுத்து விட்டு நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள தோட்டக்குறிச்சி மலையம்பாளையம் சாலையோரத்தில் உள்ள சுடுகாடு பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த கற்களின் மீது தினேஷ்குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தினேஷ்குமார் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
பலி
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த தினேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தினேஷ்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்பனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தினேஷ்குமாரின் மனைவி காயத்ரி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story