மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம்


மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம்
x
தினத்தந்தி 31 July 2021 6:22 PM GMT (Updated: 31 July 2021 6:22 PM GMT)

மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கரூர்
கொரோனா வைரசில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன. மேலும் பொதுமக்களின் நலன்கருதி ஆங்காங்கே முகாம்கள் நடத்தப்பட்டு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  அதன்படி நேற்று காலை முதல் கரூர் பகுதியில் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள ஜிடிஎஸ் அரசுபள்ளி, வெங்கமேடு வீ.வீ.ஜி நகரிலுள்ள அரசு பள்ளி, தாந்தோணிமலை அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு போக்குவரத்து கழக பணிமனை, புகளுர் டி.என்.பி.எல். மண்டபம், பணிக்கம்பட்டி அரசு உயர்நிலை பள்ளி, கல்லடை அரசு தொடக்கப்பள்ளி உள்ளிட்ட 16 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் மொத்தம் 4900 பேர் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 

Next Story