தனுஷ்கோடியில் தடையை மீறி கடலில் குளியல்


தனுஷ்கோடியில் தடையை மீறி கடலில் குளியல்
x
தினத்தந்தி 1 Aug 2021 12:04 AM IST (Updated: 1 Aug 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடியில் தடையை மீறி கடலில் சுற்றுலா பயணிகள் குளித்தனர்.

ராமேசுவரம், 
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடிக்கு விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகவே இருந்தது. அரிச்சல்முனை கடலை பார்த்த மகிழ்ச்சியில் கடல் சீற்றமாக இருப்பது தெரிந்தும் தடையை மீறி ஏராளமானோர் குழந்தைகளுடன் இறங்கி குளித்தனர். இதே போல் அரிச்சல்முனை சாலை வளைவை தாண்டி ஆபத்தை அறியாமல் கற்களின் மீது நின்று இரண்டு கடல் சேரும் இடத்தை வேடிக்கை பார்த்ததுடன், கற்களில் அமர்ந்துகொண்டு பலர் செல்பியும் எடுத்தனர். 
அரிச்சல்முனை சாலை வளைவில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் கற்கள் உள்ள பகுதிக்கு சென்று சுற்றுலாப் பயணிகள் செல்வதை தடுக்க போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே கற்கள் கொட்டப்பட்டுள்ள பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்லாமல் இருக்கும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story