இ-பாஸ் இல்லாமல் வரும் வெளிமாநில வாகனங்களுக்கு அபராதம்
இ-பாஸ் இல்லாமல் வரும் வெளிமாநில வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கீழக்கரை,
தமிழகத்தில் கொரோனா தொற்று 3-ம் அலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அண்டை மாநிலங் களில் இருந்து கீழக்கரை ஊருக்குள் அதிக வாகனங்கள் வருவதால் நோய்தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். கேரளாவில் இருந்து சில வாக னங்கள் அனுமதி பெறாமல் கீழக்கரை ஊருக்குள் சென்று வருவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் வருவாய்த்துறை மற்றும் நகராட்சியினர் கீழக்கரை சீதக்காதி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனத்தை திருப்பி அனுப்பிய தோடு ரூ.500 அபராதம் விதித்தனர். அப்போது கீழக்கரை தாசில்தார் முருகேசன், துணை தாசில்தார் பழனிக்குமார் ஆகியோர் தலைமையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் காசிநாத துரை, நகராட்சி ஆணையர் பூபதி, பொறியாளர் மீரா அலி ஆகியோர் முன்னிலையில் வருவாய்த்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் இ-பாஸ் இல்லாமல் ஊருக்குள் வந்த வெளிமாநில வாகனங்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.மேலும் இது குறித்து கீழக்கரை துணை தாசில்தார் பழனிக்குமார் கூறுகையில், இ-பாஸ் இ்ல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்துவரும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதோடு வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினர்.
Related Tags :
Next Story