சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர் விஷ்ணு


சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர் விஷ்ணு
x
தினத்தந்தி 1 Aug 2021 12:38 AM IST (Updated: 1 Aug 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

தாமிரபரணி ஆறு, புராதன சின்னங்களை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிள் ஓட்டிச் சென்று கலெக்டர் விஷ்ணு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நெல்லை:
தாமிரபரணி ஆறு, புராதன சின்னங்களை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிள் ஓட்டிச் சென்று கலெக்டர் விஷ்ணு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு, புராதன சின்னங்களை பாதுகாக்கவும் வலியுறுத்தி நேற்று சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இதில் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். மேலும் அவர்கள் ஊர்வலத்தில் சைக்கிள் ஓட்டிச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த ஊர்வலம் மேலதிருவேங்கடநாதபுரம் வரை சென்று முடிவடைந்தது.

ஆறு பாதுகாப்பு

இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-
சுற்றுச்சூழல், உடல் நலம், எரிபொருள் சிக்கனம், தாமிரபரணி ஆறு பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, அதனை தடுப்பதற்காக தண்ணீரை மறுசுழற்சி முறையில் சுத்தப்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் ஓரங்களில் கழிவுகளை கலப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story