மதுபாட்டிலுக்கு தாலி கட்டி நூதன போராட்டம்


மதுபாட்டிலுக்கு தாலி கட்டி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 1 Aug 2021 12:48 AM IST (Updated: 1 Aug 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளையில் மதுபாட்டிலுக்கு தாலி கட்டி நூதன போராட்டம் நடந்தது.

திசையன்விளை:

மது ஒழிப்பு போராளி சசி பெருமாள் நினைவு தினம் திசையன்விளையில் உள்ள காமராஜர் சிலை முன்பு அனுசரிக்கப்பட்டது. காமராஜர் சிவாஜி பொது நல இயக்க தலைவர் சிவாஜி முத்துக்குமார் தலைமை தாங்கினார். வக்கீல் ஜெயராஜ் முன்னிலை வகித்தார்.

அப்போது மது பாட்டிலுக்கு தாலி கட்டி குங்குமமிட்டும், மாலை அணிவித்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மதுவை கீழே கொட்டி அழித்தனர்.

Next Story