குண்டர் சட்டத்தில் 4 வாலிபர்கள் கைது
நெல்லை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வாலிபர்கள்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி மறுகால்குறிச்சி உருண்டைக்கல் மேலத்தெருவை சேர்ந்த அருணாச்சலம் மகன் ராமையா (வயது 25), பணகுடி தண்டையார்குளத்தை சேர்ந்த இசக்கிமுத்து மகன் முருகன் என்ற குட்டமுருகன் (32), தாழையூத்து சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த இசக்கியப்பா மகன் தளவாய்மாடசாமி (22), தாழையூத்து ராம்நகர் பகுதியை சேர்ந்த ராமையா மகன் பேச்சிமுத்து (35).
இவர்கள் அடிதடி மற்றும் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
குண்டர் சட்டம்
இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரை செய்தார். கலெக்டர் விஷ்ணு இதை ஏற்று 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று 4 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story