மாவட்ட செய்திகள்

பணியின்போது மின்சாரம் பாய்ந்து ஊழியர் சாவு + "||" + Employee death due to electric shock during work

பணியின்போது மின்சாரம் பாய்ந்து ஊழியர் சாவு

பணியின்போது மின்சாரம் பாய்ந்து ஊழியர் சாவு
பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியை சேர்ந்தவர் கணேசன்(வயது 57). இவர் அரும்பாவூரில் மின்வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி அரும்பாவூர் பெரியசாமி கோவில் அருகே உள்ள மின்மாற்றியில் பழுதை நீக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக கணேசன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கணேசன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தந்தையின் இறுதிச்சடங்கில் ஆட்டோ டிரைவர் சாவு
பண்ருட்டி அருகே தந்தையின் இறுதிச்சடங்கில் ஆட்டோ டிரைவர் இறந்தார்.
2. மயங்கி கிடந்த டெய்லர் சாவு
விருதுநகரில் மயங்கி கிடந்த டெய்லர் பரிதாபமாக இறந்தார்.
3. கிரேன் மோதி முதியவர் பலி
சிவகாசியில் கிரேன் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
4. கிணற்றில் முதியவர் பிணம்
சிவகாசி அருகே கிணற்றில் முதியவர் பிணம் கண்டெடுக்கப்பட்டது.
5. லாரி டிரைவர் திடீர் சாவு
லாாி டிரைவர் திடீரென இறந்தார்.