பெங்களூருவில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 16 பேருக்கு கொரோனா


பெங்களூருவில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 16 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 Aug 2021 1:35 AM IST (Updated: 1 Aug 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

  பெங்களூருவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதாவது ஒரே பகுதியில் 5 பேர் பாதித்தால், பாதித்தவர்கள் வீடுகளுக்கு மட்டும் சீல் என்றும், 10 பேர் பாதித்தால் தெருவுக்கு சீல் வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

  இந்த நிலையில் பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சமீபத்தில் டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தவர்கள் ஆவாா்கள். அந்த 16 பேரும் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரும் தனிமைப்படு்தப்பட்டு உள்ளனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் 82 வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

Next Story