பழுதடைந்த சாலையை சீரமைத்த போலீசார்


பழுதடைந்த சாலையை சீரமைத்த போலீசார்
x
தினத்தந்தி 1 Aug 2021 4:08 AM IST (Updated: 1 Aug 2021 4:08 AM IST)
t-max-icont-min-icon

பழுதடைந்த சாலையை சீரமைத்த போலீசார்

ஊட்டி

குன்னூரில் டென்ட்ஹில் பகுதிக்கு செல்லும் சாலையானது கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காணப்பட்டது. அந்த சாலையை மருத்துவமனை, முதியோர் இல்லம், குடியிருப்புகளுக்கு செல்பவர்கள் பயன்படுத்துகின்றனர். 

இதற்கிடையே சாலை மோசமாக கிடந்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று குன்னூர் போலீசார் 10-க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து, பழுதடைந்து இருந்த டென்ட்ஹில் சாலையை ஜல்லி, சிமெண்டு உள்ளிட்டவைகளை கொண்டு கலவை செய்து  சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இதன் மூலம் பொதுமக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதுடன், போலீசாரின் இந்த செயல் ஆட்டோ ஓட்டுனர்கள் உள்பட பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது.

Next Story