டிரைவர் குத்திக்கொலை


டிரைவர் குத்திக்கொலை
x
டிரைவர் குத்திக்கொலை
தினத்தந்தி 1 Aug 2021 4:08 AM IST (Updated: 1 Aug 2021 4:08 AM IST)
t-max-icont-min-icon

டிரைவர் குத்திக்கொலை

கோவை

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). டிரைவர். இவருடைய சொந்த ஊர் நெல்லை மாவட்டம் விஜயநாராயணம். 
ஒண்டிப்புதூரில் தோட்டம் வைத்திருப்பவர் செந்தில் (30). இந்த நிலையில் இவர்கள் இருவரும் அடிக்கடி தோட்டத்திற்கு சென்று மது அருந்துவது வழக்கம். 

சம்பவத்தன்று காலை செந்திலின் தம்பி ரகுராமன் தன்னுடைய நண்பர்கள் அனிஷ் குமார் (வயது 25), அஜித்குமார் (23), சத்தியநாராயணா (23), ஆண்டனி (27),  ஆகியோருடன் அந்த தோட்டத்திற்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கு  கறிவிருந்து வைத்து, மது குடித்து உற்சாகமாக காணப்பட்டனர்.

இதனை அறிந்த மணிகண்டனும், செந்திலும் அங்கு சென்றுள்ளனர். அங்கு இருந்தவர்கள் குடிபோதையில் மிதப்பதை பார்த்து, இங்கு எவ்வாறு மது அருந்த வரலாம்? என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அனிஷ்குமார் எங்களை தடுக்க நீ யார் என்று மணிகண்டனிடம் கூறி உள்ளார். 

அப்போது அவருக்கும், மணி கண்டனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த அனிஷ்குமார்  மற்றும் அவருடன் இருந்த நண்பர்கள் சேர்ந்து மணிகண்டனை கத்தியால் குத்தி உள்ளனர். அவரது அடி வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது.

 இதனால் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதனை அறிந்த பக்கத்து தோட்டத்தை சேர்ந்த சிலர் மணிகண்டனை  மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி  மணிகண்டன் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து அனிஷ்குமார், அஜித்குமார் சத்தியநாராயணா ,ஆண்டனி, ரகுராமன் ஆகிய  5 பேரை கைது செய்தனர்.

Next Story