தி.மு.க. பிரமுகர் அடித்துக்கொலை
தி.மு.க. பிரமுகர் அடித்துக்கொலை.
சென்னை,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் மதூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 56). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். மேலும் உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய விவசாயிகள் அணி தி.மு.க. துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வந்தார். இவரது மனைவி சங்கரி (48). இவர்களுக்கு தினகரன் (21), தமிழன் (19) என 2 மகன்களும் திவ்யபாரதி (20) என்ற மகளும் உள்ளனர். ஏற்கனவே தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என சாலவாக்கம் போலீஸ் நிலையத்திலும் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடமும் அவர் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு உத்திரமேரூர் அடுத்த மதூர் பெட்ரோல் நிலையம் அருகே சண்முகம் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், இவர் சில ஆண்டுகளுக்குப் பிறகு அ.தி.மு.க.வை சேர்ந்த அந்த ஊராட்சிமன்ற தலைவர் மீது ஊழல் புகார் கூறி அவரை பதவி நீக்கம் செய்ய முக்கிய காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. கொலை தொடர்பாக மதூரை சேர்ந்த முத்து, அவரது மகன் இன்பசேகர் உள்பட 6 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story