தாணிக்கோட்டகத்தில் தீயில் எரிந்து கூரை வீடு நாசம் - 15 பவுன் நகை- ரூ.25 ஆயிரம் சேதம்


தாணிக்கோட்டகத்தில் தீயில் எரிந்து கூரை வீடு நாசம் - 15 பவுன் நகை- ரூ.25 ஆயிரம் சேதம்
x
தினத்தந்தி 1 Aug 2021 7:38 PM IST (Updated: 1 Aug 2021 7:38 PM IST)
t-max-icont-min-icon

தாணிக்கோட்டகத்தில் தீயில் எரிந்து கூரை வீடு நாசமானது. இதில் 15 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் சேதம் அடைந்தது.

வாய்மேடு,

வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் சின்னதேவன்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது48). நேற்று காலை செல்வம் மனைவி மாரியம்மாள் சமையல் செய்து கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராதவிதமாக கூரையில் தீப்பிடித்தது.காற்று வீசியதால் வீடு முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைக்க முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.இருப்பினும் வீடு முற்றிலும் எரிந்து நாசம் அடைந்தது. இதில் வீட்டில் இருந்து கிரைண்டர், மிக்சி, பீரோ, மற்றும் 15 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் உள்ளிட்டவைகள் எரிந்து சேதம் அடைந்தது. தகவல் அறிந்த. ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன், கிராம நிர்வாக அலுவலர் அருள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினர்.

Next Story