காட்பாடியில் லாரியில் கடத்திய 31 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


காட்பாடியில் லாரியில் கடத்திய 31 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 1 Aug 2021 7:39 PM IST (Updated: 1 Aug 2021 7:48 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடியில் லாரியில் கடத்திய 31 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அரிசி கடத்தியதாக 3 பேரை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர்.

காட்பாடி,

உணவு பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் டி.ஜி.பி. ஆபாஷ்குமார் உத்தரவின் பேரில் சென்னை கோட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான்சுந்தர் தலைமையில் வேலூர் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் போலீசார் வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் நேற்று காலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி  போலீசார் சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 622 மூட்டைகளில் 31 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்ததது. மேலும் ரேஷன் அரிசி மூட்டைகளை கர்நாடகா மாநிலம் பங்காருபேட்டைக்கு கடத்தியதும் தெரிய தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி செல்ல முயன்ற பங்காருபேட்டையை சேர்ந்த பாலு (வயது 35), கோபி (42), சென்னையை சேர்ந்த அரிசி உரிமையாளர் பிரபு (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். லாரியுடன் அரிசி மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை அவர்கள் எந்த ரேஷன் கடைகளில் வாங்கினார்கள் என்பது குறித்து என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story