வேதாரண்யம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது


வேதாரண்யம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Aug 2021 7:56 PM IST (Updated: 1 Aug 2021 7:56 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்,

வேதாரண்யம் அருகே வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுப்பள்ளி கிராமம் நடு பாலத்தில் சந்தேகம்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர்கள், புதுப்பள்ளியை சேர்ந்த வடிவேல் மகன் சேனாதிபதி (வயது27), அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் மகன் சங்கர் (23) என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தது சேனாதிபதி, சங்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story