உம்பளச்சேரியில் ஆபத்தான நிலையில் ரேஷன் கடை - கிராம மக்கள் அச்சம்


உம்பளச்சேரியில் ஆபத்தான நிலையில் ரேஷன் கடை - கிராம மக்கள் அச்சம்
x
தினத்தந்தி 1 Aug 2021 8:06 PM IST (Updated: 1 Aug 2021 8:06 PM IST)
t-max-icont-min-icon

உம்பளச்சேரியில் ரேஷன் கடை கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சத்துடன் பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.

வாய்மேடு,

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உம்பளச்சேரியில் ரேஷன் கடை உள்ளது. இங்கிருந்து 680 குடும்பங்களுக்கு தமிழக அரசின் பொது வினியோகத்திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த ரேஷன் கடையை கட்டி 25 ஆண்டுகள் ஆகின்றன. கட்டிடத்தின் மேல் பகுதி முழுவதும் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டு உள்ளது. அதே போல உள்பகுதியிலும் தார்ப்பாய் போட்டு அதன் மேல்தான் அரிசிமுட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த ரேஷன் கடை கட்டிடம் சேதம் அடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் காரணமாக கிராம மக்கள் அச்சத்துடன் பொருட்களை வாங்கி செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதம் அடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story