மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் - மயிலாடுதுறையில் நடந்தது
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்தக்கோரி மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அணையை திறந்து மூடும் தன்னாட்சி உரிமையை வழங்க வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேர தலைவரை நியமனம் செய்ய வேண்டும். இதுகுறித்து தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி மாவட்ட செயலாளர் பேராசிரியர் முரளிதரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சேக்அலாவுதீன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் நவாஸ்கான், திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் மகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story