திருப்பூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு, ஆடிகிருத்திகை, ஆடி அமாவாசை ஆகிய தினங்களில் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை


திருப்பூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு, ஆடிகிருத்திகை, ஆடி அமாவாசை ஆகிய தினங்களில் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை
x
தினத்தந்தி 1 Aug 2021 9:23 PM IST (Updated: 1 Aug 2021 9:23 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு, ஆடிகிருத்திகை, ஆடி அமாவாசை ஆகிய தினங்களில் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுப்பதால் ஆடிப்பெருக்கு, ஆடிகிருத்திகை, ஆடி அமாவாசை ஆகிய தினங்களில் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் பூஜைகள் மட்டும் தொடர்ந்து நடைபெறும். 
ஆடி அமாவாசை 
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
தமிழகத்தில் தளர்வுகள் இன்றி மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பதாக அரசு அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நிலவி வரும் கொரோனா நோய்த்தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையிலும் இன்று (திங்கட்கிழமை) ஆடிக்கிருத்திகை மற்றும் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆடிப்பெருக்கு பண்டிகை மற்றும் வருகிற 8-ந்தேதி ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் நடைபெறும் விழாக்களை முன்னிட்டு, கோவில்களில் அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள்.
எனவே கொரோனாபரவலை தடுக்கும் வகையில் பண்டிகைகளிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. சாமிகளுக்கு நடைபெறும் பூஜைகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. 
அமணலிங்கேஸ்வரர் கோவில் 
அதன்படி அய்யம்பாளையம் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் (ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை), சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் (ஆடி கிருத்திகை, ஆடிபெருக்கு, ஆடி அமாவாசை), அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் (ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை), திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் (ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை), தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவில் (ஆடிப்பெருக்கு, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை), சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில் (ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை), முத்தூர் செல்வகுமாரசுவாமி கோவில் (ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை), முத்தூர் அத்தனூரம்மன் மற்றும் குப்பயண்ணசுவாமி கோவில் (ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை), மூலனூர் வஞ்சியம்மன் கோவில் (ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை),
 மேட்டுப்பாளையம் நாட்ராயசுவாமி கோவில்(ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை), வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி கோவில் (ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை), மணலூர் செல்லாண்டியம்மன் கோவில்(ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை), வள்ளியரச்சல் அழகு நாச்சியம்மன் கோவில் (ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை), கருவலூர் மாரியம்மன் கோவில் (ஆடிப்பெருக்கு,ஆடி அமாவாசை), வெள்ளியம்பதி பத்ரகாளியம்மன் கோவில்(ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை), தாராபுரம் காடு அனுமந்தராயசுவாமி கோவில்(ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை), பரஞ்சேர்வழி கரியகாளியம்மன் கோவில் (ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை), தம்மரெட்டிபாளையம் கொடுமணல் தங்கம்மன் கோவில் (ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை),
ஊத்துக்குளி வெற்றி வேலாயுதசுவாமி கோவில் (ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை), திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி (ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை), வீரராகவப்பெருமாள் கோவில் (ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை), பாப்பினி பெரியநாயகியம்மன் கோவில் (ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை), முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில் (ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை) ஆகிய 22 கோவில்களில்பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story