திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 95 பேருக்கு கொரோனா


திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 95 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 Aug 2021 9:27 PM IST (Updated: 1 Aug 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 95 பேருக்கு கொரோனா

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கிய நிலையில் நேற்று 95 பேருக்கு கொரோனா செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி 5 பேர் பலியாகினர். 
95 பேருக்கு கொரோனா 
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்று குறைந்து வந்தது. இந்நிலையில் தற்போது ஒரு சில மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்து வருகிறது. 
அதன்படி தமிழகத்தில் நேற்று 1,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. திருப்பூர் மாவட்டத்தில் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5 பேர் பலி 
இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 895-ஆக உயர்ந்துள்ளது. 
இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 129 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 95-ஆக உள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 964 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், சிகிச்சை பெற்று வந்த 5 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 836-ஆக உள்ளது. தற்போது திருப்பூர் மாவட்டத்தில் தொற்று மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியதால் கொரோனா கட்டுப்பாடுகளை மாவட்டநிர்வாகம் தீவிரமாக்கி உள்ளது. 

Next Story