திருவாரூரில் 1,838 பேருக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகள் - கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்
திருவாரூரில் 1,838 பேருக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதிய ஸ்மார்ட் கார்டு வேண்டி விண்ணப்பித்த 1,838 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையை மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன், பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர். அப்போது கலெக்டர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாவிலும் மக்கள் புதிய ஸ்மார்ட் கார்டு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு உள்ளது.
இதன்படி தாலுகா அளவில் திருவாரூரில் 246, குடவாசலில் 471, கூத்தாநல்லூரில் 93, மன்னார்குடியில் 398, நன்னிலத்தில் 175, நீடாமங்கலத்தில் 115, திருத்துறைப்பூண்டியில் 313, வலங்கைமானில் 27 என 1,838 பேருக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுலவர் சிதம்பரம், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, உதவி கலெக்டர் பாலசந்திரன், திருவாரூர் தாசில்தார் தனசேகர் உள்பட பலர் இருந்தனர்.
Related Tags :
Next Story