தஞ்சை மாவட்டத்தில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டுகோள்


தஞ்சை மாவட்டத்தில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 Aug 2021 9:44 PM IST (Updated: 1 Aug 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சீராளன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர்,

தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு 2021-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு தொழிற்பயிற்சி மையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும் மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ்(டி.சி), மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், புகைபடம் ஆகியவற்றை நேரடியாக கொண்டு சென்று பதிவேற்றம் செய்து கொள்ளலாம். எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2021-ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஒ்ன்பதாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும், முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் எட்டாம் வகுப்பு கல்வி தகுதிக்குறிய தொழிற்பிரிவுகளுக்கு எட்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வருகிற 4-ந் தேதி(புதன்கிழமை) கடைசி நாள் ஆகும்.

விண்ணப்பத்தாரர் ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story