20 டன் முருங்கைக்காய் கொள்முதல்


20 டன் முருங்கைக்காய் கொள்முதல்
x
தினத்தந்தி 1 Aug 2021 9:51 PM IST (Updated: 1 Aug 2021 9:51 PM IST)
t-max-icont-min-icon

20 டன் முருங்கைக்காய் கொள்முதல்

வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டத்தில் கிடைக்கும் முருங்கைக்காயை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று 75 விவசாயிகள் 20 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் 15 வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ கரும்பு முருங்கை ரூ.7-க்கும், மரம் முருங்கை ரூ.5-க்கும், செடி முருங்கை ரூ.6-க்கும் கொள்முதல் செய்தனர். கொள்முதல் செய்த முருங்கைக்காயை சென்னை, கோவை, மதுரை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story