தமிழகத்தில் புதிதாக விண்ணப்பித்த 3 லட்சம் பேருக்கு ரேஷன்கார்டு அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
தமிழகத்தில் புதிதாக விண்ணப்பித்த 3 லட்சம் பேருக்கு ரேஷன்கார்டு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அர.சக்கரபாணி கூறினார்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரத்தில் புதிதாக ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்த 697 பயனாளிகளுக்கு ரேஷன்கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி ஆர்.டி.ஓ. ஆனந்தி முன்னிலை வகித்தார். விழாவுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கி புதிய ரேஷன்கார்டுகள் மற்றும் இலவச வீட்டு மனை பட்டா உள்பட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் அர.சக்கரபாணி நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் பல ஆண்டுகளாக ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன்கார்டு வழங்கப்படாமல் இருந்தது. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் புதிதாக ேரஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேஷன்கார்டு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்த 3 லட்சம் பேருக்கு புதிதாக ரேஷன்கார்டு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் இன்று(நேற்று) முதல் ரேஷன்கடையில் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் பழனி குமார், ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துசாமி, ஒட்டன்சத்திரம் நகர தி.மு.க. செயலாளர் வெள்ளைச்சாமி மற்றும் தி.மு.க.வினர், பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதுபோல ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி, கள்ளிமந்தையம் ஆகிய இடங்களில் 803 பயனாளிகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி புதிய ரேஷன்கார்டுகளை வழங்கினார்.
Related Tags :
Next Story