பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது 20 நாட்களில் தீர்வு; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி


பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது 20 நாட்களில் தீர்வு; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி
x
தினத்தந்தி 1 Aug 2021 9:54 PM IST (Updated: 1 Aug 2021 9:54 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது 20 நாட்களில் தீர்வு காணப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஆறுமுகநேரி:
திருச்செந்தூர் தொகுதியில் பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது 20 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சி

ஆறுமுகநேரியை அடுத்துள்ள மூலக்கரை பஞ்சாயத்து கந்தன் குடியிருப்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மூலக்கரை பஞ்சாயத்து தலைவர் பொன்செல்வி சரவணன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ்சிங், உதவி கலெக்டர் கோகிலா, திருச்செந்தூர் யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ராணி, அலமேலு, வழக்கறிஞர் பாரி கண்ணன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி குழந்தைவேல், ஆகியோர் பேசினா்.
நிகழ்ச்சியில் தமிழக மீன் வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று பேசியதாவது:- 

20 நாட்களில் தீர்வு

பொதுமக்களிடம் பெறும் கோரிக்கை மனுக்களுக்கு 20 நாட்களுக்குள்  முறையான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும், தண்டபத்தில் உள்ள அலுவலகத்திலும் தனியாக ஓய்வு பெற்ற அதிகாரிகள் மூலம் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் துறை வாரியாக அனுப்பப்படுகிறது.
எனவே பொதுமக்கள் தங்களது தேவை மற்றும் ஊர் நன்மைகளுக்காக கொடுக்கப்படும் மனுக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் ஆறு மாதத்திற்குள் இந்த தொகுதியில் எந்த குறையும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வகுமார், மாநில மாண வர் அணி துணை செயலாளர் உமரி சங்கர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், திருச்செந்தூர் செந்தில்குமார், அகில இந்திய கப்பல் மாலுமிகள் சங்க துணை தலைவர் விமல்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story