வாணியம்பாடியில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி ரூ.15 ஆயிரம் மோசடி


வாணியம்பாடியில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி ரூ.15 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 1 Aug 2021 10:08 PM IST (Updated: 1 Aug 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி ரூ.15 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வாணியம்பாடி

பணம் எடுக்க சென்றார்

வாணியம்பாடி கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். கியாஸ் ஏஜன்சியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம். மையத்தில் வாலிபர் ஒருவர் நின்றுள்ளார்.

அவர் சரவணனுக்கு பணம் எடுத்து தருவதாகக்கூறி அவருடைய ஏ.டி.எம். கார்டை வாங்கி பணம் எடுத்து கொடுத்து விட்டு, சரணனின் ஏ.டி.எம். கார்டை கொடுக்காமல், அதற்கு பதில் தான் ஏற்கனவே வைத்திருந்த போலி ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்துள்ளார். அதை சரவணன் வாங்கிச்சென்றுள்ளார்.

ரூ.15 ஆயிரம் மோசடி

அடுத்த 2 நாட்களில் சரவணன் கணக்கில் இருந்து ரூ.15 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக அவருடைய செல் போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஏ.டி.எம். கார்டை சரிபார்த்தபோது அது போலியானது என்பதும், பணம் எடுத்து தருவதாக நாடகமாடி அந்த நபர் போலி கார்டை கொடுத்திருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து அவர் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story