அங்கன்வாடி பணியாளர்களை நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்
அங்கன்வாடி பணியாளர்களை நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று தஞ்சையில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தஞ்சாவூர்,
அங்கன்வாடி குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சாந்தா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பானு, பொருளாளர் மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அங்கன்வாடி பணியாளர்களை நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். 26 ஆண்டுகளாக 1995 வரையில் பணியில் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். பதவி உயர்வு வழங்க தாமதம் ஏற்படுவதால் பணி மூப்பு அடிப்படையில் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்களை பிற துறை பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள், இணை செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story