சூளகிரியில் ஊராட்சி மன்ற பெண் வார்டு உறுப்பினர் தற்கொலை


சூளகிரியில் ஊராட்சி மன்ற பெண் வார்டு உறுப்பினர் தற்கொலை
x
தினத்தந்தி 1 Aug 2021 10:28 PM IST (Updated: 1 Aug 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

சூளகிரியில் ஊராட்சி மன்ற பெண் வார்டு உறுப்பினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சூளகிரி:
வார்டு உறுப்பினர்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கீழ் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன். தனியார் கம்பெனி ஊழியர். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 23). சூளகிரி ஊராட்சி மன்ற 5-வது வார்டு உறுப்பினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த கிருஷ்ணவேணி வீட்டில் விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 
சாவு
பிறகு மேல் சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கிருஷ்ணவேணி இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
மேலும் திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளியும் விசாரணை நடத்தி வருகிறார். ஊராட்சி மன்ற பெண் வார்டு உறுப்பினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story