கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்; 54 பேர் கைது


கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்; 54 பேர் கைது
x
தினத்தந்தி 1 Aug 2021 10:28 PM IST (Updated: 1 Aug 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 54 பேரை போலீசார் கைது செய்தனர்.


கிருஷ்ணகிரி:
ஆர்ப்பாட்டம் 
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மண்டல செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், கிழக்கு மாவட்ட செயலாளர் காசிலிங்கம், மாவட்ட இளைஞர் அணி பாசறை சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி நகரையொட்டி அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை உள்ளூர் மக்களின் நலன் கருதி உடனே அகற்ற வேண்டும், சுங்கச்சாவடியை அகற்றும் வரை எந்த வாகன ஓட்டிகளிடமும் பணம் வசூலிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
54 பேர் கைது 
மேலும், சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிக்க விடாமல் தடுப்புகளை திறந்து வைத்து, வாகனங்களை இலவசமாக செல்ல அனுமதித்தனர். இதனால் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றன.
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், டவுன் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் மற்றும் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, 54 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Next Story