பொள்ளாச்சியில் போலீசாரின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி
பொள்ளாச்சியில் போலீசாரின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி காவலர் திருமண மண்டபத்தில் நேற்று பொள்ளாச்சி போலீஸ் சப்-டிவிசனுக்கு உட்பட்ட போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர், ஓய்வுபெற்ற போலீசார் என மொத்தம் 150 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மணி தொடங்கி வைத்தார். இதில் வடுகபாளையம், காமாட்சி நகர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தினர்.
நிகழ்ச்சியில், பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காலேப், மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷெரிப், மதிசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் கொரோனா பரவல் தடுப்பது குறித்து சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story