விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
நாகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 43 பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர்
வெளிப்பாளையம்;
நாகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 43 பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு நாகை சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டு திருமருகல் ஒன்றியம் காக்காமங்கலம் கிராமத்தை சேர்ந்த பவுனம்மாள் மர்ம சாவில் தொடர்புடையவர்களை கைது செய்யாததை கண்டித்தும், ஏர்வாடி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை தாக்கியவர்களை கைது செய்யாததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
120 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தை தொடர்ந்தனர். இதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 43 ெபண்கள் உள்பட 120 பேரை கைது செய்தனர். இந்த மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story