திருப்புவனம்,
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகாவை சேர்ந்த முள்ளிசெவல் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 36). இவர் சிவகங்கை மாவட்டம் பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்த அரசனூர் கிராமத்தில் உள்ள தனியார் மில்லில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 30-ந் தேதி மில்லில் 10 அடி உயரமுள்ள கோகாலியில்(குதிரை) ஏறி நின்று வேலை பார்த்துள்ளார். அதுசமயம் தவறி கீழே விழுந்ததில் தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மறுநாள் அவர் இறந்தார். இதுகுறித்து மணிவண்ணனின் மனைவி பாண்டிச்செல்வி பூவந்தி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.